கொரோனாவால் குழந்தைகளின் வாசிப்பு திறன், பாதிப்பு - கருத்துக்கணிப்பு முடிவு
கொரோனா தொற்று நோயால் குழந்தைகளின் வாசிப்பு திறனும், எண்ணும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பிரதம் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளையும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளத்தில் நடத்தி உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு வங்காளத்தின் 17 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 189 குழந்தைகள் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவை வருமாறு:-
* 3-ம் வகுப்பில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 32.9 சதவீதத்தினரும், 2018-ல் 36.6 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காலத்தில் இது 27.7 சதவீதமாக குறைந்துள்ளது.
* 5-ம் வகுப்பில் உள்ள மாணவர்களில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 51.8 சதவீதத்தினரும், 2018-ல் 50.5 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்தது. தற்போது இது 48 சதவீதமாக குறைந்துள்ளது.
* 2-ம் வகுப்பில் குறைந்தபட்சம் வார்த்தைகளை வாசிக்கிற திறன் 2014-ல் 54.8 சதவீதமாகவும், 2018-ல் 66.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 53 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த முடிவுகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, இணையவெளியில் வெளியிட்டார்.
மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணுகிற திறன் குறைந்திருப்பது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், “ஊரடங்கு பொதுமுடக்கம், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்றலுக்கு இடையூறாக உள்ளது.
தற்போது கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story