இந்தியாவில் குறைந்த கொரோனா; 58,077 ஆக பாதிப்பு உறுதி


இந்தியாவில் குறைந்த கொரோனா; 58,077 ஆக பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 11 Feb 2022 9:44 AM IST (Updated: 11 Feb 2022 9:44 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு குறைந்து 58,077 ஆக உறுதியாகி உள்ளது.






புதுடெல்லி,


இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 58,077 ஆக உறுதியாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.

இது, நேற்றுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.  நேற்று 67,084 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 58,077 ஆக குறைந்துள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 4,24,78,060ல் இருந்து 4,25,36,137 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் (1,50,407 பேர்) குணமடைந்து உள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 4,11,80,751ல் இருந்து 4,13,31,158 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாட்டில் கொரோனாவுக்கு 657 பேர் உயிரிழந்து உள்ளனர்.  நேற்று 1,241 ஆக இருந்தது.  இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,06,520ல் இருந்து 5,07,177 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story