விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு


விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 Feb 2022 9:44 AM IST (Updated: 11 Feb 2022 9:44 AM IST)
t-max-icont-min-icon

விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான  பரிவர்த்தனையை அவர் செய்தார். 

இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாத நிலையில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தண்டனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் கருத்துக்களை கேட்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பலமுறை வாய்ப்பளித்தும் அவர் ஆஜராகவில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

நீதிமன்ற உத்தரவுப்படி குற்றவாளி ஆஜராகவில்லை என்றால், தண்டனை விவரங்களை நீதிமன்றமே அறிவிக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story