ஆப்கானிஸ்தான் சூழ்நிலை அண்டை நாடுகளுக்கு கவலைக்குரியது - மத்திய அரசு
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலை அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலைக்குரியது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது.
இதற்கிடையில், கடந்த மாதம் இந்தியா-மத்திய ஆசியா நாடுகள் இடையே சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கஜகஸ்தான், உஸ்பகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - மத்திய ஆசிய நாடுகள் இடையே ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக மக்களவையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகிதா ராய் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை-மந்திரி முரளிதரன், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியா-மத்திய ஆசியா நாடுகள் இடையேயான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் சூழ்நிலை அண்டை நாடுகளான இந்தியா மற்றும் மத்திய ஆசியா நாடுகளுக்கு கவலைக்குரியது’ என்றார்.
Related Tags :
Next Story