இந்திய விமானப்படையில் சேர பொன்னான வாய்ப்பு..!!! விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
ஆயுத படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஏர்போர்ஸ் அப்ரண்டிஸ் பயிற்சி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய விளம்பரம் www.indianairforce.nic.in என்ற வலைதளத்தில் வெளிவந்துள்ளது.
இந்திய விமானப்படையில் பயிற்சி ஆட்சேர்ப்பு 2022:
காலியிடங்களின் எண்ணிக்கை:
மெஷினிஸ்ட்: 04 இடங்கள்
ஷிட் மெட்டல்: 07 இடங்கள்
வெல்டர் கேஸ் & எலெக்ட்: 06 இடங்கள்
மெக்கானிக் ரேடியோ ரேடார் விமானம்: 09 இடங்கள்
தச்சர்: 03 இடங்கள்
எலக்ட்ரீசியன் ஏர்கிராப்ட்: 14 இடங்கள்
பெயிண்டர் ஜெனரல்: 01 இடங்கள்
பிட்டர்: 26 இடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10வது அல்லது 12வது இடைநிலை வகுப்பு தேர்ச்சி மற்றும் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, ஜடிஜ-யில் தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14 முதல் 21 வயது வரை
ஊதிய அளவு: 7700/- (மாதத்திற்கு)
விண்ணப்பிப்பது எப்படி
விருப்பமுள்ள தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பம் பெற www.apprenticeshipindia.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று வாய்ப்புகள் (“opportunities”) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
அதன்பின்பு மேற்கூறிய பதவிகளில் ஒன்றை விண்ணப்பிப்போர் தேர்வு செய்ய வேண்டும்.
முக்கிய தேதிகள்
இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழி மட்டுமே ஏற்கப்படும். 01 ஏப்ரல் 2022 அன்று தொடங்கும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19, 2022. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.indianairforce.nic.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story