உத்தரப்பிரதேசத்தில் பிப் 14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகளுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
லக்னோ,
நாட்டில் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் பரவ தொடங்கிய கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் வைரசின் காரணமாக பல மாநிலங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது.
இதையடுத்து, நாட்டில் வைரஸ் பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, மாநிலங்கள் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், உத்திரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது.
பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story