மராட்டியத்தில் வெகுவாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் வெகுவாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 10:31 PM IST (Updated: 12 Feb 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 4 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 455 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 6 ஆயிரத்து 248-ஐ விட குறைவாகும். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 39 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 12 ஆயிரத்து 986 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 76 லட்சத்து 39 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.

Next Story