சொத்து தகராறு: நடுரோட்டில் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட உறவினர்கள் - வீடியோ
டெல்லியில் சொத்து தகராறில் உறவினர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
டெல்லியில் சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு பிரிவினரும் தெருவில் வைத்து ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வடகிழக்கு டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் உள்ள சியாம்வீர் மற்றும் ஜெகத் என்ற இருவரின் குடும்பத்தினருக்கிடையே ஏற்கெனவே சொத்து தகராறு இருந்துள்ளது. மேலும் ஒருவர் மீது ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.
இதையடுத்து இரு தரப்பினரும் பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒருவரையொருவர் கட்டையால் கொடூரமாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் நடைபாதைகளில் நின்று பார்ப்பதை வீடியோவில் காண முடிகிறது.
இந்த நிலையில் மோதல் குறித்து போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருதரப்பினரையும் பிரித்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வீடியோவின் மூலமாக குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் வக்கீல்கள் என்று கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#JUSTIN:In Northeast Delhi,one family attacked another over property dispute. We found that to maintain their hold in the area,the accused used to display boards of Advocate & BJP. We'll take up the matter to the BJP officials & bar council:DCP Sanjay Sain.@IndianExpress,@ieDelhipic.twitter.com/D3E6ak2Ltq
— Mahender Singh Manral (@mahendermanral) February 12, 2022
Related Tags :
Next Story