காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்ற மனநிலை மாற்றப்பட வேண்டும்; அசாம் முதல்-மந்திரி
காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்ற மனநிலை மாற்றப்பட வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார்.
இதற்கிடையில், ராகுல்காந்தி குறித்த ஹிமந்தா பிஸ்வாவின் கருத்துக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அசாம் முதல்-மந்திரி பதவியை ஹிமந்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில், சந்திரசேகர ராவின் கருத்துக்கு ஹிமந்தா பிஸ்வா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஹிமந்தா கூறுகையில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ராகுல்காந்தி மீது நான் தெரிவித்த கருத்துக்கு கொந்தளிக்கிறாரே தவிர இந்திய ராணுவம் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு கொந்தளிக்கவில்லை. காந்தி (ராகுல்காந்தி) குடும்பத்தை நீங்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்ற இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story