குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த ஊக்கு..! அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
திருச்சூர் அருகே 8 மாத குழந்தையின் சுவாசச் குழாயில் சிக்கியிருந்த ஊக்கை அறுவை சிகிச்சையின் மூலமாக மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்- தீபா தம்பதிகள். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை கடந்த 2 வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தது. சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.
மருத்தவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடையவில்லை.
குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை அறிவதற்காக ஸ்கேன் எடுத்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். குழந்தையின் ஸ்கேனை பார்த்தில் சுவாசக் குழாயில் ஒரு ஊக்கு சிக்கி இருப்பது தெரியவந்தது.
பின்னர் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையின் சுவாசக் குழாயில் இருந்த ஊக்கை மருத்துவர்கள் அகற்றினர். சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததால் இன்று குழந்தையை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story