கோவாவில் ஒரே கட்டமாக நாளை சட்டசபை தேர்தல்


கோவாவில் ஒரே கட்டமாக நாளை சட்டசபை தேர்தல்
x
தினத்தந்தி 13 Feb 2022 6:04 PM IST (Updated: 13 Feb 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

கோவா மாநிலத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பனாஜி,

கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. 

அந்த வகையில் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு 14 ஆம் தேதி(நாளை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவை தவிர ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கோவா மாநிலத்தில் போட்டியிடுகின்றன. 

கோவா மாநிலத்தில் 11 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஆயிரத்து 722 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கோவாவில், பாதுகாப்பு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story