ட்ரோன் பைலட் உரிமம் இனி தேவை இல்லை- மத்திய அரசு


ட்ரோன் பைலட் உரிமம் இனி தேவை இல்லை- மத்திய அரசு
x
தினத்தந்தி 13 Feb 2022 6:12 PM IST (Updated: 13 Feb 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் ஆளில்லா விமானங்களை இயக்க ட்ரோன் பைலட் உரிமம் தேவை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் ஆளில்லா விமானங்களை இயக்க ட்ரோன் பைலட் உரிமம் தேவை என்பதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் ட்ரோனை இயக்குவதற்கு டிஜிசிஏ-அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பள்ளியால் வழங்கப்படும் ரிமோட் பைலட் சான்றிதழ் (RPC) போதுமானதாக இருக்கும் என்றும் வணிக நோக்கங்கள் இல்லாமல் 2 கிலோ வரையிலான   ஆளில்லா விமானத்தை இயக்க ரிமோட் பைலட் சான்றிதழ் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

நாட்டில் ட்ரோன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சில விதிவிலக்குகளுடன் ட்ரோன்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.



Next Story