மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து தேர்தலில் வெற்றிபெற சிலர் முயற்சி - பரூக் அப்துல்லா


மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து தேர்தலில் வெற்றிபெற சிலர் முயற்சி - பரூக் அப்துல்லா
x
தினத்தந்தி 13 Feb 2022 6:38 PM IST (Updated: 13 Feb 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

இந்திய மக்கள் விருப்பப்படி உடுத்துவதற்கும், உண்பதற்கும், மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் உரிமையுண்டு என பரூக் அப்துல்லா பேசியுள்ளார்.

ஸ்ரீநகர், 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். 

இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர். இதனால் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

ஹிஜாப் அணிந்து வந்த மானவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது.  இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது;- 

இந்திய மக்கள் விருப்பப்படி உடுத்துவதற்கும், உண்பதற்கும், மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் உரிமையுண்டு. மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து தேர்தலில் வெற்றிபெற சிலர் முயற்சி செய்கின்றனர்” என்றார். 

Next Story