பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
யு.ஜி.சியானது பல்கலைகழங்கள் மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
புதுடெல்லி,
கொரோனா பரவல் தொடக்கத்திலிருந்தே உயர்கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கவனித்து வரும் யு.ஜி.சியானது அடுத்தடுத்து வரும் கொரோனா கட்டுபாடுகளை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியுட்டுள்ளது.
அதன்படி யு.ஜி.சியின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது,
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வேண்டுகோளின் படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் எப்போதும் கொரோனோ நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தற்போதைய கொரோனா பரவலின் தன்மையை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள கொரோனா பரவலை பொறுத்து உயர் கல்வி வளாகங்களை திறக்கலாம். மேலும் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது வெளியிடலாம் என கூறினார்.
Related Tags :
Next Story