உ.பி., உத்தரகாண்ட், கோவா தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
லக்னோ,
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 3 மாநிலங்களிலும் காலை 9 மணி வரை பதிவான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடர்பான விவரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி, கோவாவில் 11.04 சதவீத வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 9.45 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 5.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story