கேரளாவில் திருமண ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்; வாலிபர் பலி
கேரளாவில் திருமண ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வாலிபர் ஒருவர் பலியானார்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண விழாவையொட்டி கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடந்த இசை நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திருமணசடங்கு முடிந்து நேற்று புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஜிஷ்ணு என்பவரின் கும்பல் ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஜிஷ்ணுவின் தலையில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story