பாஜக ஆட்சியில் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்- பிரதமர் மோடி


பாஜக ஆட்சியில் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Feb 2022 2:30 PM IST (Updated: 14 Feb 2022 2:30 PM IST)
t-max-icont-min-icon

முத்தலாக் தடை சட்டம் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

கான்பூர், 

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 2 கட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி கடைசி மற்றும் 7 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேச தேர்தலை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், கான்பூர் தேஹாத் பகுதியில் இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது;- உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் தான் பாதுகாப்பாக இருப்பதாக முஸ்லீம் பெண்கள் உணர்கிறார்கள். அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் முஸ்லீம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  முத்தலாக் தடை சட்டம் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. 

2017- ஆம் ஆண்டுக்கு முன்பாக உத்தரபிரதேசத்தில் ரேஷன் கார்டு மோசடி ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. லட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகளை அவர்கள் உருவாக்கினார்கள். இந்த போலி ரேஷன் கார்டு திட்டத்தை இரட்டை என் ஜின் கொண்ட அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. இன்று கோடிக்கணக்கான உத்தரபிரதேச மக்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகிறார்கள். என் ஏழை சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் அடுப்புகள் ஒருபோதும் அணைக்கப்படாது” என்றார். 


Next Story