ஹிஜாப் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

ஹிஜாப் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 14 Feb 2022 3:59 PM IST (Updated: 14 Feb 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் பல பெண்கள் ஹிஜாப் அணியாததே பாலியல் குற்ற விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

இந்தியாவில் பல  பெண்கள் ஹிஜாப் அணியாததே பாலியல் குற்ற விகிதம்  அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று  கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

இது குறித்து எம்.எல்.ஏ ஜமீர் அகமது ஹிஜாப் கூறியிருப்பதாவது:  ஹிஜாப் என்றால் பர்தா என்று இஸ்லாமில் பொருளாகும். அதாவது முகத்தை மூடுவது என்று அர்த்தம். பெண்கள் வயதுக்கு வந்த பிறகு அவர்களது அழகை வெளியாட்கள் பார்க்காதபடி மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ளது. இன்று நாட்டில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

 இதற்கு காரணம் என்ன தெரியுமா? பல பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை. அதுதான் இதற்குக் காரணம்” என்றார்.  மேலும், இவ்விவகாரத்தில் புதுமையான விளக்கம் ஒன்றை அளித்த ஜமீர் அகமது, ‘ ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை. தங்களைக் காத்துக் கொள்ள கொண்டு என்று விரும்புவோர் அணியலாம். இதுதான் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது” என்றார். 

Next Story