சின்ன வெங்காயம் ஏற்றுமதி 487% உயர்வு


சின்ன வெங்காயம் ஏற்றுமதி 487% உயர்வு
x
தினத்தந்தி 14 Feb 2022 11:56 PM IST (Updated: 14 Feb 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

சின்ன வெங்காயம் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவில் 487% உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

2013-க்குப் பிறகு இந்தியாவில் சின்ன வெங்காய ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி சின்ன வெங்காய ஏற்றுமதி 48.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 11.6 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதுகுறித்து மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக இலங்கை (35.9%), மலேசியா (29.4%), தாய்லாந்து (12%), ஐக்கிய அரபு அமீரகம் (7.5%) மற்றும் சிங்கப்பூர் (5.8%) விளங்குகின்றன.

இந்தியாவின் அன்னாச்சி பழம் ஏற்றுமதியும் சுமார் நூறு சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 1.63 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இதன் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3.26 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக ஐக்கிய அரபு அமீரகம் (32.2%), நேபாளம் (22.7%), கத்தார் (16.6%), மாலத்தீவுகள் (13.2%) மற்றும் அமெரிக்கா (7.1%).விளங்குகின்றன.

இந்தியா அனைத்து விதமான ஏற்றுமதியிலும் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story