ராகுல் காந்திக்கு எதிராக ஆயிரம் தேசத்துரோக வழக்குகள் - அசாம் பா.ஜ.க. முடிவு
ராகுல் காந்திக்கு எதிராக ஆயிரம் தேசத்துரோக வழக்குகள் தொடர அசாம் பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
கவுகாத்தி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘நமது கலாசாரம், பன்முகத்தன்மை, மொழிகள், மக்களின் ஒருமைப்பாடு, மாநிலங்களின் கூட்டு என்று நமது ஒற்றுமையில்தான் நம் பலம் இருக்கிறது. குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை அது காணப்படுகிறது’ என்று கூறியிருந்தார்.
அதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களை ராகுல் காந்தி புறக்கணித்துவிட்டதாகவும், அருணாசலபிரதேசம் தங்களுடையது என்ற சீனாவின் கருத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக ஆயிரம் தேசத்துரோக வழக்குகள் தொடர முடிவெடுத்திருப்பதாக அசாம் மாநில பா.ஜ.க. நேற்று அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story