கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி: கர்நாடக ஐகோர்ட்டு


கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி: கர்நாடக ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 15 Feb 2022 3:50 AM IST (Updated: 15 Feb 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு பிறப்பித்த தடையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஆன்லைன்சூதாட்டங்களுக்கு தடை

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அரசு தடை விதித்திருப்பதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்சித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

தடை விதிப்பது சரியல்ல

அதன்படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்சித் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது அரசு எந்த விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Next Story