கர்நாடகத்தில் பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை திறப்பு மாநில அரசு அறிவிப்பு


கர்நாடகத்தில் பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை திறப்பு மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 5:33 AM IST (Updated: 15 Feb 2022 5:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் உயர்நிலை பள்ளிகளை தொடர்ந்து பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை(புதன்கிழமை) திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு, 

உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது.

இதுதொடர்பாக மாணவர்கள் கடந்த 8-ந் தேதி போராட்டம் நடத்தினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டு மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து முதல் கட்டமாக உயர்நிலை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, பள்ளிக்கல்வித் துறை மந்திரி பி.சி.நாகேஸ் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பி.யூ. கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளை 16-ந் தேதி (நாளை) முதல் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story