சிக்னலில் அடுத்தடுத்து நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய லாரி - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி


சிக்னலில் அடுத்தடுத்து நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய லாரி - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2022 11:46 AM IST (Updated: 15 Feb 2022 11:46 AM IST)
t-max-icont-min-icon

சிக்னலில் அடுத்தடுத்து நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை-புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. நெடுஞ்சாலையில் ஹொபொலி என்ற பகுதியில் உள்ள சிக்னலில் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. 

சிக்னலில் வாகனங்கள் மெல்ல முன்னேறி சென்றபோது அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரி முன்னே மெல்ல சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

கார்கள், பைக்குகள் என முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தினர் பயணித்த கார் மீது லாரி வேகமாக மோதியதில் காரில் இருந்த 4 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story