நாட்டில் 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் 300 சதவீதம் அதிகம்


நாட்டில் 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் 300 சதவீதம் அதிகம்
x
தினத்தந்தி 15 Feb 2022 3:47 PM IST (Updated: 15 Feb 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் 300 சதவீதம் அதிகரித்து உள்ளது என போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


இந்தியாவில் ஒருபுறம் ஏழ்மை நிலை, வேலை வாய்ப்பின்மை, மக்கள் தொகை பெருக்கம் என பல்வேறு விவகாரங்கள் நீடித்து வரும் சூழலில் போதை பொருட்கள் உபயோகமும் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் 300 சதவீதம் அதிகரித்து உள்ளது என போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த வாரியத்தின் இயக்குனர்-ஜெனரல் எஸ்.என். பிரதான் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடந்த 2017ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் வகை போதை பொருள் 2,146 கிலோகிராம்.  இது கடந்த 2021ம் ஆண்டில் 7,282 கிலோகிராம் ஆக அதிகரித்து உள்ளது.  தோராய அடிப்படையில் இது 300 சதவீதம் அதிகம்.

கடந்த 2017ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஓபியம் வகை போதை பொருள் 2,551 கிலோகிராம்.  இது கடந்த 2021ம் ஆண்டில் 4,386 கிலோகிராம் ஆக அதிகரித்து உள்ளது.  இது 172 சதவீதம் அதிகம் ஆகும்.

இதேபோன்று, கடந்த 2017ம் ஆண்டு கஞ்சா வகையை சேர்ந்த போதை பொருள், 3 லட்சத்து 52 ஆயிரத்து 539 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இது கடந்த 2021ம் ஆண்டில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 631 கிலோகிராம் ஆக அதிகரித்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story