கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்வு


கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று  உயர்வு
x
தினத்தந்தி 15 Feb 2022 7:32 PM IST (Updated: 15 Feb 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,776- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,776- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் கடந்த சில தினங்களாக பதிவாகி வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 28 ஆயிரத்து 148- ஆக உயர்ந்துள்ளது.  

கேரளாவில் நேற்று 8,989- பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று கிட்டதட்ட  அதைவிட கூடுதலாக 3 ஆயிரம் பதிவாகியுள்ளது மக்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 32,027- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 40 ஆயிரத்து 864- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  1,23,825- ஆக குறைந்துள்ளது. 


Next Story