கர்நாடகாவில் புதிதாக 1,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கர்நாடகாவில் புதிதாக 1,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 15 Feb 2022 11:21 PM IST (Updated: 15 Feb 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று புதிதாக 1,405 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,29,642 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,691 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,762 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,63,085 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 26,832 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


Next Story