1½ ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வினியோகம் தொடங்கியது
1½ ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வினியோகம் தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமலை,
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்த நேரடியாக இலவச தரிசன டிக்கெட் வழங்குவதை தேவஸ்தானம் நிறுத்தியது. 300 ரூபாய் டிக்கெட் மட்டும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் இலவச தரிசன டிக்கெட்டை நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி 1½ வருடங்களுக்கு பிறகு நேற்று இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணிதொடங்கியது.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேருக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் பக்தர்கள் வரிசையில் நின்று டிக்கெட் பெற்றனர். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story