இளம் எம்.எல்.ஏ சச்சின் தேவ், மேயர் ஆர்யா ராஜேந்திரனை மணக்கிறார்


இளம் எம்.எல்.ஏ சச்சின் தேவ், மேயர் ஆர்யா ராஜேந்திரனை மணக்கிறார்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:06 PM IST (Updated: 16 Feb 2022 12:06 PM IST)
t-max-icont-min-icon

பாலுச்சேரி எம்.எல்.ஏ. கே சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எம்.எல்.ஏ சச்சினும், ஆர்யாவும் தங்களின் ' இளம் வயது' காரணமாக செய்திகளில் பிரபலமாகி உள்ளனர். 

2020 இல் ஆர்யா ராஜேந்திரன் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் படித்த  போது திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு போட்டியிட்டார். அதன்பின் ஆர்யா திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றார், ஆர்யா இந்தியாவின் மிக இளைய மேயர் என அழைக்கபட்டார். 

சச்சின் கோழிக்கோடு அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும், கோழிக்கோடு சட்டக் கல்லூரியில் சட்டத்திலும் பட்டம் பெற்றார். அதன்பின் தேர்தலில் போட்டியிட்டு மாநில சட்டமன்றத்தின் பாலுச்சேரி தொகுதியின் இளைய எம்.எல்.ஏ ஆக பணியாற்றிவருகிறார். 

சச்சின் தற்போது எஸ்எப்ஜ யின் தேசிய இணை செயலாளராக உள்ளார். இதே அமைப்பில் மாநிலக் குழு உறுப்பினராக ஆர்யா உள்ளார், சிபிஎம் கட்சியின் குழந்தைகள் அமைப்பான பாலசங்கத்தில் இருந்த காலத்திலிருந்தே அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவார்கள். 

இந்நிலையில், பாலுச்சேரி எம்எல்ஏ கே சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.  திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், ஒரு மாதம் கழித்து திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக சச்சினின் தந்தை கே.எம்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story