ஹிஜாப் விவகாரம் கர்நாடக ஐகோர்ட்டில் 4- வது நாளாக விசாரணை


ஹிஜாப் விவகாரம் கர்நாடக ஐகோர்ட்டில் 4- வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 16 Feb 2022 2:55 PM IST (Updated: 16 Feb 2022 2:55 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஐகோர்ட்டில் இன்று 3-வது நாளாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 18 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல தங்களை அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினர்.  

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு, மாணவர்கள் யாரும் மத அடையாள ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று கூறியது. இந்த நிலையில் இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில்  இன்று  3-வது நாளாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story