அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு


அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு
x
தினத்தந்தி 16 Feb 2022 3:39 PM IST (Updated: 16 Feb 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மட் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது எனவும்  இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Next Story