மாற்று அணி அமைக்கும் முயற்சியில் தீவிரம்; உத்தவ் தாக்கரேவை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரும் 10-ம் தேதி மும்பை சென்று சந்திக்கவுள்ளார்.
ஐதராபாத்,
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரும் 10-ம் தேதி மும்பை சென்று சந்திக்கவுள்ளார். உத்தவ் தாக்கரேயின் அழைப்பின் பேரில் சந்திரசேகர் ராவ் செல்வதாகவும், இந்திய கூட்டாட்சி அமைப்பை காப்பாற்றுவதற்காக சந்திரசேகர் ராவ் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளதாகவும் தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் கூட்டட்சி தன்மைக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்து இருந்தார். சந்திரசேகர் ராவின் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு நல்குவதாக உத்தவ் தாக்கரே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story