ராகுல்காந்தி பற்றி சர்ச்சை விமர்சனம் - அசாம் முதல்-மந்திரி மீது வழக்கு பதிவு


ராகுல்காந்தி பற்றி சர்ச்சை விமர்சனம் - அசாம் முதல்-மந்திரி மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 17 Feb 2022 3:32 AM IST (Updated: 17 Feb 2022 3:32 AM IST)
t-max-icont-min-icon

அசாம் முதல்-மந்திரிக்கு எதிராக ஜூபிளி ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஐதராபாத், 

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து இருந்தார்.அவருக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. 

இந்தநிலையில், சர்மாவுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி எம்.பி. ஐதராபாத் ஜுபிளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், அரசியல் ஆதாயத்துக்காக ராகுல்காந்தி பற்றி சர்மா ஆபாசமாக பேசியதாக அவர் கூறியிருந்தார். 

அதன் அடிப்படையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எதிராக ஜூபிளி ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட ஆலோசனை பெற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story