டெல்லி: ஹோட்டலில் இந்திய ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை


டெல்லி: ஹோட்டலில் இந்திய ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2022 4:18 PM IST (Updated: 17 Feb 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

புது டெல்லி,

தலைநகர் டெல்லியிலுள்ள பகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த ராணுவ வீரர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் தங்க வந்துள்ளார். அதன் பின் இன்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதைத்தொடந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரரின் ஹோட்டல் அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு சிறுமி ஒருவரை அவர் துன்புறுத்தியதே காரணம் என ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை கடிதம் கிடைத்ததை அடுத்து போலீசார் பல கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story