மாலை அணிவிப்பதில் தள்ளுமுள்ளு.. மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்!


மாலை அணிவிப்பதில் தள்ளுமுள்ளு.. மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்!
x
தினத்தந்தி 17 Feb 2022 9:25 PM IST (Updated: 17 Feb 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

பாஜக தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் 20ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபட்டார். அதன்பின், அவர் பரிட்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்த பிரசார மேடையில் அவருக்கு அணிவிப்பதற்காக மிகப்பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது.மேடையில் நின்றிருந்த பாஜக தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக  அவர் தடுமாறி பின் பக்கமாக இருந்த ஷோபாவில் விழுந்தார். 
இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.அதன்பின் அவர் மாலை வேண்டாம் என்று சொல்லி புறக்கணித்துவிட்டார். பின்னர் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரசில் இரண்டு பேட்ஸ்மென்கள் உள்ளனர். அவர்கள் ஒரே சமயத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார்கள்.இதன்மூலம் அவர்கள் ஆட்டமிழந்து வெளியேறப்போவது உறுதியாகி உள்ளது.

இதுவரை எங்கள் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைகக் யாராலும் முடியவில்லை” என்று பேசினார்.

Next Story