கர்நாடகத்தில் 8 பள்ளி-கல்லூரிகளில் மட்டுமே ஹிஜாப் பிரச்சினை உள்ளது: மந்திரி பி.சி.நாகேஸ்
கர்நாடகத்தில் 8 பள்ளி-கல்லூரிகளில் மட்டுமே ஹிஜாப் விவகாரம் உள்ளதாக மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
தர்ணா நடத்தினர்
கர்நாடகத்தில் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாணவ-மாணவிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்து. ஆனால் சில பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி-கல்லூரிக்கு வருகிறார்கள். அவர்களை கல்வி நிலைய நிர்வாகத்தினர் திருப்பி அனுப்புகிறார்கள். பல்லாரி சரளா தேவி கல்லூரிக்கு ஹிஜாப்புடன் வந்த மாணவிகளை வகுப்பில் அனுமதிக்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த மாணவிகள் பெற்றோருடன் அங்கேயே அமர்ந்து தர்ணா நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பெலகாவி விஜய் துணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கோஷமிட்ட மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லூரிக்கு சாராத நபர்களும் அதில் பங்கேற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.
மாணவிகள் ஊர்வலம்
சித்ரதுர்காவில் உள்ள மகளிர் பி.யூ.கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை. இதை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறுகையில், "நாங்கள் இங்கு 5 ஆண்டுகளாக படித்து வருகிறோம். நாங்கள் இக்கல்லூரி மாணவிகள் இல்லையா?. ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு தான் பிறப்பித்துள்ளது. நாங்கள் பர்தாவை கழற்றுகிறோம். ஆனால் ஹிஜாப்பை கழற்ற மாட்டோம். நாங்கள் இங்கு போராட்டம் நடத்துவோம்" என்றனர்.
சிக்கமகளூருவில் முஸ்லிம் மாணவிகள் ஊர்வலம் நடத்தினர். இந்து மாணவிகள் வளையல் போன்றவற்றை அணிந்து வருகிறார்கள். அதற்கு எந்த தடையும் இல்லை என்று மாணவிகள் கேள்வி எழுப்பினர்.
8 பள்ளி-கல்லூரிகளில் மட்டுமே...
பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறுகையில், “கர்நாடகத்தில் 75 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும் பி.யூ.கல்லூரிகள் உள்ளன. இதில் 8 பள்ளி-கல்லூரிகளில் மட்டுமே ஹிஜாப் விவகாரம் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பிற பள்ளி-கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டின் உத்தரவை பின்பற்றுகிறார்கள்.
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் சுமார் 80 ஆயிரம் முஸ்லிம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இதில் சிலர் மட்டுமே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு கட்டுப்படாமல் உள்ளனர். நேற்று முன்தினம் 112 பேர் வகுப்பக்கு ஆஜராகாமல் திரும்பி சென்றனர். நேற்று ஹிஜாப் கழற்ற சொன்னதால் அதை நிராகரித்துவிட்டு 38 பேர் வீட்டுக்கு சென்றனர்” என்றார்.
Related Tags :
Next Story