கர்நாடகம் செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிப்பு


கர்நாடகம் செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 4:36 AM IST (Updated: 18 Feb 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

கோவா, கேரளாவில் இருந்து கர்நாடகம் செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக கர்நாடக அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கோவா, கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதனால் கோவா, கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று கூறி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது.

Next Story