மசாஜ் சென்டரில் பயங்கர தீ விபத்து - பெண் உட்பட இருவர் பலி..!


மசாஜ் சென்டரில் பயங்கர தீ விபத்து - பெண் உட்பட இருவர் பலி..!
x
தினத்தந்தி 18 Feb 2022 12:55 PM IST (Updated: 18 Feb 2022 12:55 PM IST)
t-max-icont-min-icon

நொய்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட இருவர் பலியாகினர்.

நொய்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மசாஜ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் செக்டார் 53 என்ற பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருந்த மசாஜ் சென்டரில் நேற்று மாலை 6 மணியளவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக திடீரென தீப்பற்றியது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் இருந்த மசாஜ் சென்டரை மீண்டும் திறப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குறுகிய நேரத்திற்குள் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராதா சவுகன் என்ற பெண்ணும் (வயது 26) அங்குஷ் ஆனந்த் என்ற ஆணும் (வயது 35) இந்த தீ விபத்தில் பலியாகினர்.

Next Story