காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் அமளி; கர்நாடக சட்டசபை 21-ம் தேதி வரை ஒத்திவைப்பு


காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் அமளி; கர்நாடக சட்டசபை 21-ம் தேதி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 4:00 PM IST (Updated: 18 Feb 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எம்ஏக்களின் தொடர் அமளியால் சட்டசபையை வருகிற 21-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

டெல்லி செங்கோட்யைில் ஒரு நாள் காவி கொடி பறக்கும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார். இது தேசத்துரோகம் என்று கூறி வரும் காங்கிரஸ், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொடரந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக சட்டசபை கூட்டத்தில் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தர்ணா நடத்தி வருந்தனர். இந்த போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடிங்கியது.

இந்த நிலையில இன்று மீண்டும் சட்ட சபை கூடிய போது இதே கோரிக்கைகை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ஈசுவரப்பாபை பதிவ நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதனால் அவையை சபாநாயகரால்  தொடர்ந்து நடத்த முடியாத  நிலை ஏற்பட்டது.

இதனை தொடரந்து பகல் 12.30 மணி அளிவில் சபையை வரும் 21-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார். இதனால் அவை நாள் முழுவதும் முடங்கியது.


Next Story