சி.பி.எம். கட்சி தொண்டரை கொலை செய்த வழக்கில் பி.ஜே.பி.யை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்சூர் அருகே, சி.பி.எம். கட்சி தொண்டர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த ஏழு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளா,
திருச்சூர் அருகே உள்ள செம்பழநேழத்து பகுதியை சேர்ந்தவர் ராஜு என்கிற வெம்பல்லூர் வேம்பநாடன் ராஜு (43). இவர் சிபிஎம் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவர் அன்றைய தினம் தனது மனைவி சந்தியா உடன் தனது மனைவியின் சகோதரி பீணா வசிக்கும் வெம்பல்லூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது நள்ளிரவு 2 மணியளவில், இவர் உறங்கி கொண்டிருந்த போது, திடீர் என்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த ஏழு நபர்கள் அவரை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்தனர். அதில் ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ராஜு வை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த, பி.ஜே.பி கட்சியை சேர்ந்த 9 நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனை விசாரித்த திருச்சூர் முதல் வகுப்பு கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பீ.என். வினோத் இந்த வழக்கில் தொடர்புடைய ரதீஷ் (35) கிரிஷ் (42) ரஞ்சித் (31) என்கிற ராஜு , மனோஜ் (44) , சுரேந்திரன் (36), கிஷோர் (40 ), ஷாஜி என்கிற மாரி ஷாஜி (39) ஆகிய 7 நபர்களையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது அவர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் கண்ணன், ஶ்ரீகுமார் ஆகிய இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அபராதம் செலுத்தும் தொகை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story