கழிவறைகளை கூட கட்ட முடியாத காங்கிரசால் உங்களது வருங்காலம் மேம்படுமா? பா.ஜ.க. தாக்கு


கழிவறைகளை கூட கட்ட முடியாத காங்கிரசால் உங்களது வருங்காலம் மேம்படுமா? பா.ஜ.க. தாக்கு
x
தினத்தந்தி 19 Feb 2022 12:39 AM IST (Updated: 19 Feb 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

கழிவறைகளை கூட கட்ட முடியாத காங்கிரஸ் கட்சியால் உங்களது வருங்காலம் மேம்படுமா? என மத்திய மந்திரி இரானி பிரசாரத்தில் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



புதுடெல்லி,


மணிப்பூரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.  இதில், அக்கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சியால் கழிவறைகளை கூட கட்ட முடியவில்லை.

உங்களுடைய வருங்காலம் அவர்களால் மேம்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  பா.ஜ.க. மட்டுமே மணிப்பூர் மக்களுக்கு செல்வவளம் கொண்டு வந்து சேர்க்க முடியும்.  மக்கள் கண்ணியத்துடன் வாழ்கின்றனர் என்பதனை அக்கட்சியாலேயே உறுதி செய்ய முடியும்.

வரும் 28ந்தேதிக்கு பின் மணிப்பூரில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ.க. கொண்டு வரும்.  மணிப்பூரின் பெருமைக்குரியவர்கள் மாணவிகள்.  அவர்களுக்கு ஸ்கூட்டி மற்றும் கல்வி கற்பதற்கான லேப்டாப் ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம் என்று கூறியுள்ளார்.


Next Story