நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது - குமாரசாமி
தர்ணா நடத்தும் காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரி ஈசுவரப்பா விவகாரத்தில் நான் உண்மை நிலையை எடுத்து கூறினேன். அதற்காக நான் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக கருத்து கூறியதாக யாரும் நினைக்கக்கூடாது. தேசிய கொடி குறித்து பேசும் காங்கிரசார், சட்டசபைக்குள் தேசிய கொடியை பிடித்து போராட்டம் நடத்தினர். இது தான் அவர்கள் தேசிய கொடிக்கு கொடுக்கும் மரியாதையா?.
தர்ணா நடத்தும் காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால் சபையை நடத்த விடாமல் குறுக்கீடு செய்கிறார்கள். ஹிஜாப் விவகாரத்தை தொடக்கத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். அது தற்போது மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இரு மதங்களின் மாணவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் திட்டம். நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story