லஷ்கர் இயக்கத்துக்கு தகவல் கசிவு; ஐ.பி.எஸ். அதிகாரி கைது
லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு தகவல்களை கசிய விட்ட என்.ஐ.ஏ.வை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் அரவிந்த் திக்விஜய் நேகி. ஹுரியத் பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி வழங்கிய வழக்கில் புலனாய்வு செய்ததற்காக 2017ம் ஆண்டு வீரதீர விருது பெற்றவர்.
ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தடை செய்யப்பட்ட, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு மிக முக்கிய தகவல்களை கசிய விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய அமைப்பில் பணியாற்றி கொண்டு நாட்டுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story