குஜராத்: விற்பனையில் களைகட்டும் 'புஷ்பா' டிசைன் சேலை..!


குஜராத்: விற்பனையில் களைகட்டும் புஷ்பா டிசைன் சேலை..!
x
தினத்தந்தி 19 Feb 2022 9:38 AM IST (Updated: 19 Feb 2022 9:38 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை விற்பனை களைகட்டியுள்ளது.

காந்தி நகர்,

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடி்த்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது.

இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது அந்த சேலை 'புஷ்பா சேலை' என்ற பெயரில் பிரபலமடைந்து வருகிறது. 

முதலில் இந்த டிசைன் சேலையை தயாரித்த சரண்பால் தன்னுடைய சமூக வலைதளங்களில் அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து பலரும் அவரிடம் அந்த டிசைன் சேலைக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் 'புஷ்பா சேலை' வியாபாரம் களைகட்டியுள்ளது. இதுவரை 3000-க்கும் அதிகமான புஷ்பா சேலைகளை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக சரண்பால் கூறியுள்ளார்.

Next Story