சமூக ஊடகம் வழியே ஒப்பந்தம்; வெளிநாட்டு பணம், படுகொலைகள்... 3 பேர் கைது


சமூக ஊடகம் வழியே ஒப்பந்தம்; வெளிநாட்டு பணம், படுகொலைகள்... 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2022 9:51 PM IST (Updated: 19 Feb 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் சமூக ஊடகம் வழியே ஒப்பந்தம் பெற்று படுகொலைகளை செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.



சோனிபத்,


பஞ்சாபின் சோனிபத் மாவட்டத்தில் ஜுவான் கிராம பகுதியை சேர்ந்த 3 பேர் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.  இதுபற்றிய தகவல் அறிந்து, போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களது வங்கி கணக்குகளில், வெளிநாடுகளில் இருந்து கிடைத்த ரூ.6 லட்சம் பணமும் இருந்துள்ளது.  அவர்கள் சமூக ஊடகம் வழியே ஒப்பந்தம் பெற்று கொண்டு, குறிப்பிட்ட நபர்களை படுகொலை செய்து வந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 8ந்தேதி இதுபோன்று பஞ்சாபின் மொரீண்டா நகரில் நபர் ஒருவரை படுகொலை செய்துள்ள விவரமும் தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.  அவர்களிடம் பல்வேறு ஆயுதங்களும் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து 3 பேர் மீது ஆயுத சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சோனிபத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அவர்களுக்கு காலிஸ்தான் டைகர் படை மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story