கர்நாடகம் முழுவதும் வருகிற 21-ந் தேதி போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கர்நாடகம் முழுவதும் வருகிற 21-ந் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் மந்திரி ஈசுவரப்பா கருத்து கூறியுள்ளார். அதனால் அவரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பகல்-இரவாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு பலத்தை கூட்டும் வகையில் வருகிற 21-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்கள், தாலுகா தலைநகரங்கள் மற்றும் சட்டசபை தொகுதிகளின் தலைநகரங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அன்றைய தினம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, தேசிய கொடிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் போராட வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story