கொரோனா பாதிப்பு சரிவு: உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கு ரத்து..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Feb 2022 3:50 AM IST (Updated: 20 Feb 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் உத்தர பிரதேச மாநிலத்தில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

ஏழு கட்ட சட்டசபை தேர்தலை சந்தித்து வருகிற உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது.

அங்கு இரவு நேர ஊடரங்கு அமலில் இருந்து வந்தது. கடந்த 13-ந்தேதி முதல் இதில் ஒரு மணி நேரம் தளர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரவல் மேலும் குறைந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் அங்கு இரவு நேர ஊரடங்கு ரத்தானது.

இதை மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

Next Story