மணிப்பூரில் வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டதால் பரபரப்பு
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தந்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.
இம்பால்,
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல், வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் 5-ம் தேதியில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக சஞ்சோய் சிங் என்பவர் போட்டியிடுகிறார்.
அவர் தனது வீட்டின் நுழைவாயில் அருகே தன்னுடைய தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் தேர்தல் தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டனர். அதில், வேட்பாளரின் தந்தை தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்-மந்திரியுமான கான்ராட் கே.சங்மா சந்தித்துப் பேசினார். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story