இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பெரியவர்களில் 80 சதவீதத்தினருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பெரியவர்களில் 80 சதவீதத்தினருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Feb 2022 5:59 AM IST (Updated: 20 Feb 2022 5:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பெரியவர்களில் 80 சதவீதத்தினருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடுவது தொடங்கியது. பல கட்டங்களாக இது விரிவுபடுத்தப்பட்டது. இதுவரையில் பெரியவர்களில் 80 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு விட்டனர். இந்த தகவலை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

இதுவரையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியைத்தாண்டி உள்ளது. நாடு 100 சதவீதத்தினருக்கும் 2 டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

அதிகாரப்பூர்வ தரவுகள், பெரியவர்களில் 96.5 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு விட்டதாக கூறுகின்றன. 15 முதல் 18 வயது வரையிலானவர்களில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு விட்டனர்.

Next Story