சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கொலைக்கு பின்பும் உடலுறவில் ஈடுபட்ட அவலம்
அரியானாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று பின் உடலுறவில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பானிபட்,
அரியானாவின் பானிபட் நகரில் உர்லானா களன் கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி குப்பை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அந்த பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 38) மற்றும் சாகர் (வயது 36) இருவரும் இதனை கவனித்து சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். அவர்கள் பிரதீப்பின் வீட்டுக்கு சிறுமியை கடத்தி கொண்டு சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.
தீ வைத்து எரிப்பு
இதனால், அலறி சத்தம் போட்டுள்ள சிறுமியை அவரது துப்பட்டாவை கொண்டு கழுத்தில் இறுக்கியுள்ளனர். இதில் சிறுமி மூச்சு திணறி, துடிதுடித்து உயிரிழந்து விட்டார். அதன்பின்னரும், உயிரிழந்த உடலுடன் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு உள்ளனர். சிறுமியின் உடைகளை தீ வைத்து எரித்து உள்ளனர். இதன்பின் அந்த கிராமத்தில் உள்ள கழிவுநீர் குளத்தில் சிறுமியின் உடலை வீசி விட்டு சென்றுள்ளனர்.
கோர்ட்டு வேதனை
இதுபற்றிய வழக்கு கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த தீர்ப்பில், மனிதர்களின் உள்ளே குடியிருந்து, விழித்தெழுந்து அனைத்து மனித குணங்களையும் அழிக்கும் வகையிலான மிருகங்களை வளர்ந்து வந்த அந்த சிறுமி எதிர்கொள்ளும்போது, ஒரு சாதாரண நாள் எப்படியொரு பயங்கர நாளாக மாறும் என ஒருவரும் கற்பனை செய்துகூட காண முடியாது. வீட்டை விட்டு செல்லும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வேதனை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த சிறுமியை கொலை செய்த பின்பும், மீண்டும் உடலுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட கொடூர குற்றம், சமூகத்தின் கூட்டு மனசாட்சியையும் மற்றும் மனித இனத்திற்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீதிபதி கார்க், அரிதிலும் அரிய வகை கீழ்த்தர குற்றம் என வகைப்படுத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளார். அபராதமும் விதித்துள்ளார். எனினும், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு இந்த தீர்ப்பினை உறுதி செய்ய வேண்டி உள்ளது.
Related Tags :
Next Story