ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை


ஹிஜாப் விவகாரம் குறித்து  கர்நாடக ஐகோர்ட்டில் நாளை  மீண்டும் விசாரணை
x
தினத்தந்தி 20 Feb 2022 8:38 PM IST (Updated: 20 Feb 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் கா்நாடக ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணை நடக்கிறது

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்றது.  இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறுகிறது.  மதியம் 2.30 மணியளவில்  விசாரணை நடக்க உள்ளது. 


Next Story